About SRMA

வணக்கம்

       உலகமயமாக்கள், தாராளமயமாக்களுக்கு முன்பு ஆசிய கண்டத்திலேயே சென்னை மாநகரமும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி ஆடைகளின் உற்பத்தி நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் சென்னை ஒரு ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பின் மையமாகவே இருந்தது.

       வண்ணராப்பேட்டை, ராயபுரம் போன்ற பகுதிகளில் உள்ள வணிகர்கள் சிங்காரதோட்டம் எனும் பகுதியில், ஏற்றுமதி போக மிகுதியாக உள்ள ஆயத்த ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து தரம் பிரித்தும், துணியாக கொள்முதல் செய்தவைகளை ஆயத்த ஆடைகளாக உற்பத்தி செய்தும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்தனர். அதன் அடிப்படையில்தான் சிங்காரதோட்டம் எனும் மார்க்கெட் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் தாமாகவே உருவாகியது

V.Veeraiah (a) Kamatchi Kannan
V.Veeraiah (a)
Kamatchi Kannan

Secretary

       கால சக்கரம் சுழல, உலகளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக1991 ம் ஆண்டு நமது இந்திய தேசமும் உலகமயமாக்கள், தாராளமயமாக்கள் எனும் பொருளாதார கொள்கையை ஏற்றது.

சென்னை மாநகரமும் ஏற்றுமதி உற்பத்தி மையம் எனும் நிலையிலிருந்து மாற தொடங்கியது.

ஏற்றுமதியின் மிகுதியை ஆதரமாக கொண்டு உருவான நமது மார்க்கெட்டும் ஈரோடு, சேலம், கோவை, மும்பை, அஹமதாபாத், சூரத், இச்சல்கராஞ்சி போன்ற நகரங்களில் இருந்து கொள்முதல் செய்து பெரிய அளவில் உற்பத்தி செய்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி, அசாம், நாக்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு விற்பனையை தொடங்கினர். அதன் அடிப்படையில் Export surplus மார்க்கெட்டாக இருந்த சிங்காரதோட்டம் surplus மற்றும் தயாரிப்பு சந்தையாக மாறியது.இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களுக்கும், surplus மற்றும் trading செய்யும் வணிகர்களுக்கும் உதவும் விதமாக 2007 ம் ஆண்டு SRMA எனும் சங்கம் தொடங்கப்பட்டது.

சங்கம் துவங்கிய தினத்திலிருந்து அணைத்து தரப்பட்ட வணிகர்களையும் தனது சுயநலமற்ற பணிகளால் ஈர்த்து அவர்களின் நம்பிக்கையை வெகுவாக பெற்றது.

அவ்வப்பொழுது தேவையான பணிகளை சிறப்பாக செயலாற்றியது SRMA.

குறிப்பாக Vat வரி, பணம் மதிப்பிழப்பு, GST வரி முறைகள் போன்ற காலங்களில் அணைத்து தரப்பு வணிகர்களுக்கும் சரியான வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்து சேவை செய்தது.

Covid பொது முடக்க காலகட்டங்களில் தொழிலாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கும் நல திட்ட பணிகளை மிகவும் சிறப்பாக செய்தது. அரசுடன் இணைந்து covid தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தியது.

0 +

Support Given

0 +

Project Done

0 M +

Get Awards

0 +

Cup of Coffee