வணக்கம்,
ஆயத்த ஆடைகளின் தொழில் துறையில் ஏற்படும் அதிரடியான மாற்றங்கள் குறித்து ஒவ்வொரு தொழில் முனைவோறும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய காலம் இது. குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகப்படியான கவனத்துடன், ஏற்படும் மாற்றங்களை சுவீகரிக்க வேண்டும். ஏனெனில் அடுத்த 2 பத்து ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் versus சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ( micro, smal, medium ) என்கிற போட்டியில்தான் தொழில் துறை நகர்வுகள் இருக்கும். அரசின் தொழில் கொள்கையும், பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சிறு, குறு, நடுத்தர நிறுவணங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுவது போன்றே தோன்றும்.
ஆயத்த ஆடைகளின் தொழில் வளர்ச்சியில் நீண்ட கால தொய்வு அல்லது மந்த நிலைக்கு வாய்ப்பு கிடையாவே கிடையாது. சந்தையில் பொருள்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் ஏற்பட்டு, உற்பத்தியில் பற்றாக்குறை உருவாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் சந்தையில் ஏற்படும் டிமாண்டை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் எவ்விதம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வளர்ச்சி பாதையில் பயணிக்கபோகிறது? என்பதே பல நூறு கேள்விகளாகும். இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தனித்து திட்டமிட்டு முன்னேறுவது என்பது மிகுந்த சவாலான காரியமாகும். ஆனால் வர்த்தக அமைப்புகளால் இது எளிதில் சாத்தியமாகும்.

அதற்காகவே, SRMA பிரத்தியேகமான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதனை வெற்றிகரமான தனது 3 வது கார்மெண்ட்ஸ் fair ல் தொழில் துறைக்கு சமர்ப்பிக்க உள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இது SRMA வின் மூன்று ஆண்டுகால உழைப்பால் உருவானதாகும். இந்த சமர்ப்பணதிற்கு பிறகு தொழில் துறையில் குறிப்பிட்ட வளர்ச்சியை அணைத்து உறுப்பினர்களும் பெறுவார்கள் என்பது திண்ணம்.
வெகு விரைவில் நமது வெற்றிகரமான 3 வது கார்மெண்ட்ஸ் fair ல்……….
ஆவலுடன்
செயலாளர்
SRMA.